
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: சொக்கம்பட்டு ஜெயமங்கள துர்காம்பிகை கோவிலில் துர்காஷ்டமி விழா நடந்தது.
சொக்கம்பட்டு - கரியமாணிக்கம் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற ஜெயமங்கள துர்காம்பிகை கோவில் உள்ளது. இக்கோவிலில் துர்காஷ்டமி திருவிழா நடந்தது. இதையொட்டி, காலை பால், இளநீர், தேன் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு அம்மனுக்கு அபி ேஷக ஆராதனை, இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. இதில், முன்னாள் எம்.பி., தன்ராஜ் உட்பட ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.