ADDED : ஜூலை 29, 2025 09:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; இ -சிகரெட் மற்றும் குட்கா பாக்கெட் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி மிஷன் வீதியில் கடை ஒன்றில், தடை செய்யப்பட்ட இ-சிகரெட் விற்பதாக பெரியக்கடை போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும்  போலீசார் கடையில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
போதை பொருட்களான குட்கா பாக்கெட்கள்,  இ--சிகரெட் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். கடை உரிமையாளர் புதுச்சேரி முல்லா வீதியை சேர்ந்த  சையது பயஸ், 33,  என்பவரை போலீசார் கைது செய்தனர்.

