தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'புதுச்சேரிக்கு முன்கூட்டியே தேர்தல் அறிவிப்பு' :விளக்கம் அளிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

 'புதுச்சேரிக்கு முன்கூட்டியே தேர்தல் அறிவிப்பு' :விளக்கம் அளிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

 'புதுச்சேரிக்கு முன்கூட்டியே தேர்தல் அறிவிப்பு' :விளக்கம் அளிக்க ராமதாஸ் வலியுறுத்தல்


ADDED : மார் 18, 2026 04:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 04:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரிக்கு முன்கூட்டியே தேர்தல் அறிவிக்கப்பட்டது குறித்து ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என, மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை;

இந்திய தேர்தல் ஆணையம் புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஒரு அசாதாரணமான அவசர கால நடவடிக்கையாக தோன்றுகிறது. தேர்தல் அறிவிக்கும் நாளிலேயே வேட்பு மனு தாக்கல் தொடங்குவதும், ஒரு வாரத்திற்குள் வேட்புமனு தாக்கல் முடிவடையும் வகையில் கால அட்டவணை நிர்ணயிக்கப்பட்டிருப்பதும் அரசியல் கட்சிகளுக்கும் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கும் அதிக சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழ்நாடும் புதுச்சேரியும் ஒரே தேதியில் தேர்தலை சந்தித்து வந்த நிலையில், இம்முறை மட்டும் புதுச்சேரிக்கு தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான காரணம் ஏன் என, இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும்.

ஒருவேளை புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கின் காரணமாகவே புதுச்சேரி தேர்தலில் அவசரம் காட்டப்படுகிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.

இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் இந்தியத் தேர்தல் ஆணையம், புதுச்சேரி அரசுக்கும் 14 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் 20ம் தேதி தேர்தல் ஆணையம் தனது பதிலை அளிக்க வேண்டும். ஒருவேளை நீதிமன்றம் அந்தப் பதிலை ஆய்வு செய்து சட்டசபை தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிடக் கூடும் என்ற அச்சத்தினாலேயே, வழக்கு விசாரணைக்கு வரும் முன்பே தேர்தல் அட்டவணையை அறிவித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் தேர்தல் ஆணையம் அவசர அவசரமாக இந்த அறிவிப்பை வெளியிட்டது போலத் தோன்றுகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us