பல்கலை., சமுதாய கல்லுாரியில் புவி தின விழா கொண்டாட்டம்
பல்கலை., சமுதாய கல்லுாரியில் புவி தின விழா கொண்டாட்டம்
ADDED : ஏப் 16, 2026 11:11 PM

புதுச்சேரி: புவி தின கொண்டாட்டத்தையொட்டி, புதுச்சேரி பல்கலைக்கழக சமூக கல்லுாரியில் துாய்மை பணி நடந்தது.
புதுச்சேரி பல்கலைக்கழகச் சமுதாயக் கல்லுாரியில் புவி தின கொண்டாட்டம் நேற்று 16ம் தேதி முதல் ஏப்., 22ம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு நடைபெற உள்ளது. துவக்க விழா கல்லுாரி வளாகத்தில் நேற்று பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியுடன் துவங்கியது.
கல்லுாரி முதல்வர் லலிதா ராமகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி, பேராசிரியர் பாண்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கல்லுாரி வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் துாய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் இருநுாறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் துாய்மை பணியில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியை மேலாண்மைத்துறை உதவிப் பேராசிரியர் பாரதி மற்றும் மேலாண்மைத்துறை முனைவர் சத்தியமூர்த்தி ஒருங்கிணைந்தனர். பிஸ்லேரி இன்டர்நேஷனல் நிறுவன அதிகாரி ஐயப்பன், சமூக ஈடுபாடு நடவடிக்கை குழு உறுப்பினர் செல்வம் மற்றும் இதர கல்லுாரிப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
புவி தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வரும் ஏப்., 22ம் தேதி வரை கல்லுாரி வளாகத்தில் தொடர்ந்து நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
