/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊசுடு தொகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க பூமி பூஜை
/
ஊசுடு தொகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க பூமி பூஜை
ஊசுடு தொகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க பூமி பூஜை
ஊசுடு தொகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க பூமி பூஜை
ADDED : ஆக 11, 2025 06:50 AM

வில்லியனுார் : சேதராப்பட்டு மற்றும் பிள்ளையார்குப்பம் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால், சாலை வசதி மற்றும் கருமாதி கொட்டகை கட்டுமான பணிகளை சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கிவைத்தார்.
ஊசுடு தொகுதியில் ஆதிராவிடர் நலத்துறை பேட்கோ சார்பில் ரூ.69 லட்சம் செலவில் சேதராப்பட்டு புதுகாலனி திடீர் நகர் பகுதிக்கு சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் வசதி, சேதராப்பட்டு பழைய காலனி பகுதியில் கருமாதி கொட்டகைக்கு செல்லும் சாலை, பிள்ளையார்குப்பம் பேட் பகுதியில் கருமாதி கொட்டகை மற்றும் மதில் சுவர் அமைப்பதற்கு சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் பா.ஜ., ஊசுடு தொகுதி ஒருங்கிணைப்பாளர் சாய்தியாகராஜன், பிரபாவதி, தொகுதி பா.ஜ நிர்வாகிகள் முத்தாலுமுரளி, புருஷோத்தமன், ஏழுமலை, நரேஷ், மாயவன், மதன், ஜீவா, பாலச்சந்தர் உட்பட பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.