/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இ.கம்யூ., இந்திராநகர் கதிர்காமம் மாநாடு
/
இ.கம்யூ., இந்திராநகர் கதிர்காமம் மாநாடு
ADDED : ஜூலை 14, 2025 03:52 AM

புதுச்சேரி : இந்திய கம்யூ., சார்பில் இந்திரா நகர், கதிர்காமம் தொகுதி மாநாடு எல்லப்பிள்ளை சாவடி, தனியார் ஹோட்டலில் நடந்தது.
மாநாட்டிற்கு தொகுதி குழு உறுப்பினர்கள் விசுவநாதன், மகாலிங்கம், ராஜகுமாரி ஆகியோர் தலைமை தாங்கினர். கட்சியின் மூத்த நிர்வாகி ஜெயபாலன் மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்தார். மாநில செயலாளர் சலீம் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.
முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், மாநில துணை செயலாளர் சேதுசெல்வம், தேசியக் குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, முன்னாள் எம்.எல்.ஏ., நாரா கலைநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
தொகுதி செயலாளர் கண்ணன் அறிக்கையை சமர்ப்பித்தார். மாநிலகுழு உறுப்பினர்கள் சீனிவாசன், மூர்த்தி, தொகுதி குழு பொறுப்பாளர்கள் சேகர், சண்முகம், செங்குட்டுவன், மச்சகாந்தன், கல்யாணி, திருமுருகன், சுகுமாரன், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில், கனகன் ஏரியில் ரசாயன கழிவுநீர், கலப்பதை தடுத்து, துார் வாரி நடைபாதை அமைக்க வேண்டும். காந்தி நகர் வழுதாவூர் சாலையின் ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை விரிவுபடுத்த வேண்டும். வீடற்ற மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பட்டா வழங்க வேண்டும்.
ராஜிவ் குழந்தைகள் மருத்துவமனை எதிரில் சாலையை கடக்க சுரங்கப்பாதை அமைத்துத் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.