/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரெஸ்டோ பார்களின் அனுமதியை ரத்து செய்ய இ.கம்யூ., வலியுறுத்தல்
/
ரெஸ்டோ பார்களின் அனுமதியை ரத்து செய்ய இ.கம்யூ., வலியுறுத்தல்
ரெஸ்டோ பார்களின் அனுமதியை ரத்து செய்ய இ.கம்யூ., வலியுறுத்தல்
ரெஸ்டோ பார்களின் அனுமதியை ரத்து செய்ய இ.கம்யூ., வலியுறுத்தல்
ADDED : ஆக 13, 2025 02:43 AM
புதுச்சேரி : ரெஸ்டோ பார்களின் அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரி ஆளும் என்.ஆர்.காங்., - பா.ஜ., அரசு ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி வழங்கியதால், 100க்கும் மேற்பட்ட பார்கள் துவங்கப்பட்டு, கலாசார சீரழிவு ஏற்பட்டுள்ளது.ரெஸ்டோ பார்கள் இணையதளம் மூலம் பல்வேறு சலுகைகளை வழங்கி அழைப்பு விடுக்கின்றன. இந்த அழைப்பினை பார்த்து சென்னை, பெங்களூர் போன்ற வெளி மாநிலங்களில் பணிபுரியும் இளைஞர்கள், பெண்கள் புதுச்சேரிக்கு வருகை தந்து குடித்து விட்டுகும்மாளம் போடுகின்றனர். போதை தலைக்கேறி தன் நிலை மறந்து பல்வேறு அசம்பாவித செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன் பிறந்தநாள் கொண்டாட சென்னையில் இருந்து புதுச்சேரி வந்த கல்லுாரி மாணவர்கள், போதையில் ரெஸ்டோ பாரில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுபோன்று, வெளியே வராத கொலைகள், கற்பழிப்புகள் அதிக அளவில் ரெஸ்ட்ரோ பார்களில் நடந்து வருகிறது.
ரெஸ்டோ பார்கள் செயல்படும் நேரத்தினை கண்காணிக்க வேண்டிய கலால் துறை அலட்சியம் காட்டுவதால், அதிகாலை வரையில் இயங்குகின்றன.கலாசாரத்தை முற்றிலும் சீரழிக்கும், மக்களுக்கு எவ்வித பலனும் அளிக்காத ரெஸ்டோ பார்களின் அனுமதியை அரசு ரத்து செய்து நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.