/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இ.சி.ஆர்., பிரிலெப்டில் அச்சுறுத்தும் மெகா பள்ளம்
/
இ.சி.ஆர்., பிரிலெப்டில் அச்சுறுத்தும் மெகா பள்ளம்
ADDED : டிச 19, 2024 06:43 AM

புதுச்சேரி: பிரிலெப்டில் உள்ள மெகா பள்ளம் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது.
புதுச்சேரி இ.சி.ஆரில் ராஜிவ் சிக்னல் அருகே பிரிலெப்டில் பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. கனமழையால் இப்பள்ளம் பெரிதாகி வாகன ஓட்டிகளை மிரட்டி வருகிறது. ஜல்லிகள் பெயர்ந்து சிதறி கிடக்கிறது.
இதனால், பிரிலெப்டில் காமராஜர் சாலையில் திரும்பும் வாகனங்கள் தொடர் விபத்தில் சிக்கி வருகின்றன. குறிப்பாக பைக்கில் வரும் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். பெரிய பள்ளம் காரணமாக வாகனங்கள் தடையின்றி செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் இப்பகுதியில் ஏற்படுகிறது.
போர்கால அடிப்படையில் பிரிலெப்டில் உள்ள மெகா பள்ளத்தை சரி செய்ய பொதுப்பணித் துறையின் நெடுஞ்சாலை கோட்டம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

