sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'சமுதாயத்தை மாற்றி அமைக்கும் சக்தி கொண்டது கல்வி '

 'சமுதாயத்தை மாற்றி அமைக்கும் சக்தி கொண்டது கல்வி '

 'சமுதாயத்தை மாற்றி அமைக்கும் சக்தி கொண்டது கல்வி '


ADDED : பிப் 14, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 04:25 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: லேப்டாப் மாணவர்களுக்கான அறிவு தேடல், லட்சிய கனவுகளுக்கான ஒரு திறவுகோல் என கவர்னர் கைலாஷ்நாதன் பேசினார்.

புதுச்சேரி அரசு பள்ளி கல்வித்துறை சார்பில், ஏம்பலம் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த லேப்டாப் வழங்கும் விழாவில், அவர், பேசியதாவது:

மாணவர்கள் கையில் தரப்படும் லேப்டாப் ஒரு சாதாரண எலக்ட்ரிக் டிவைஸ் அல்ல. அது அறிவு தேடலுக்கும், லட்சிய கனவுகளுக்கான ஒரு திறவுகோல். இன்று, உலகின் மிகப் பெரிய நுாலகம் உங்கள் கையில் தரப்படுகிறது. அந்த உலகத்தை அணுக உதவும் கருவி தான் இந்த லேப்டாப்.

மாணவர்கள் அனைவருக்கும் தரமான கல்வி, கிராமப்புற மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பு, டிஜிட்டல் கல்வி என்ற இந்த மூன்றும் இதில் அடங்கும். கல்வி என்பது ஒரு தனி நபர் வாழ்க்கையை மட்டும் அல்ல, ஒரு சமுதாயத்தையே மாற்றி அமைக்கும் சக்தி கொண்டது.

அதனால் தான், புதுச்சேரி அரசு, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக அதிக முக்கியத்துவம் தருகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக புதுச்சேரி அரசு இதை செய்து இருக்கிறது, என் றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us