/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்வி திறன் மேம்பாட்டு மதிப்பீட்டு ஆய்வு கூட்டம்
/
கல்வி திறன் மேம்பாட்டு மதிப்பீட்டு ஆய்வு கூட்டம்
ADDED : அக் 18, 2025 07:19 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பயிற்சி மையம் சார்பில், என்.சி.இ.ஆர்.டி., மூலம் மாணவர்களின் கல்வி திறன் மேம்பாட்டு மதிப்பீடு தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது.
தேசிய கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான என்.சி.இ.ஆர்.டி., மூலம் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாணவர்களின் கல்வி திறன் மேம்பாட்டு மதிப்பீடு தொடர்பான ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, புதுச்சேரியில் 3, 6 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி திறன் மேம்பாட்டு மதிப்பீட்டு தொடர்பான ஆய்வு கூட்டம், தனியார் ஓட்டலில் நடந்தது.
மாநில பயிற்சி மைய சிறப்பு பணி அலுவலர் சுகுணா சுகிர்தபாய் தலைமை தாங்கினார். இணை இயக்குநர் வெர்பினா ஜெயராஜ் துவக்கி வைத்தார். இணை இயக்குநர் சிவகாமி வாழ்த்தி பேசினார்.
சமக்ர சிக்ஷா மாநில திட்ட அதிகாரி எழில் கல்பனா உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாநில பயிற்சி மைய அதிகாரிகள் செய்திருந்தனர்.