தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஏக்லவ்யா சர்வதேச பள்ளி மாணவர்கள் அணு ஆராய்ச்சி மையத்தை பார்வை

ஏக்லவ்யா சர்வதேச பள்ளி மாணவர்கள் அணு ஆராய்ச்சி மையத்தை பார்வை

ஏக்லவ்யா சர்வதேச பள்ளி மாணவர்கள் அணு ஆராய்ச்சி மையத்தை பார்வை


ADDED : ஏப் 12, 2025 07:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2025 07:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி; புதுச்சேரி ஆச்சார்யா கல்விக்குழுமத்தின், ஏக்லவ்யா சர்வதேசப் பள்ளியில் பயிலும் 9ம் வகுப்பு மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர், கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

அங்கு, எரிபொருள் மீள்சுழற்சி மையத்திற்கு சென்ற மாணவர்களுக்கு, விஞ்ஞானிகள் அதன் மாதிரிகள், வரைப்படங்கள், விளக்கப் பலகைகள் வாயிலாக எவ்வாறு எரிபொருள் மீள்சுழற்சி செய்து விநியோகம் செய்யப்படுகிறது என்பதை விளக்கம் அளித்தனர்.

வேதியியல் ஆய்வுக் கூடத்திற்கு சென்று பொட்டசியம், பொலோனியம் போன்ற தனிமம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது. அதன் பயன்பாடுகள் குறித்து விளக்கம் பெற்றனர். ஸ்பெக்ட்ரோமீட்டர் அறைக்கு சென்ற மாணவர்கள், அங்கு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர்.

விஞ்ஞானிகள் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கருத்தரங்கு, வினாடி- வினா நிகழ்ச்சிகள் நடத்தி, முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் ஜெஸ்வந்த், ஆரவ் ஜெயின், ரோஹித் ஆகியோருக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினர்.

மேலும், பிளஸ் 2 முடித்த பிறகு மேற்கொண்டு படிக்க வேண்டிய துறைகள், தேர்வுகள் குறித்து விழிப்புணர்வு, ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

ஆச்சார்ய கல்விக்குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அரவிந்தன், ஏக்லவ்யா சர்வதேசப் பள்ளியின் முதல்வர் சரண்யா, மாணவர்களை வழிநடத்திய ஆசிரியர்கள் முல்லை வழுதி, ராஜராஜேஸ்வரி ஆகியோருக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us