தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/முதியவரை தாக்கி கொலை மிரட்டல்

முதியவரை தாக்கி கொலை மிரட்டல்

முதியவரை தாக்கி கொலை மிரட்டல்


UPDATED : நவ 19, 2026 06:00 PM

ADDED : நவ 19, 2026 06:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 06:00 PM ADDED : நவ 19, 2026 06:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: முதியவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த முதியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகூர் அடுத்துள்ள குருவிநத்தம் பெரியார் நகரை சேர்ந்தவர் ரஞ்சித் 36; எலெக்ரிஷன். இவரது தந்தை ராஜலிங்கம், கடந்த 17 ம் தேதி மாலை வீட்டின் மாடியில் அமர்ந்திருந்தார். அப்போது, பக்கத்தில் உள்ள அம்பிகா வீட்டில் நடந்த துக்க நிகழ்சிக்கு வந்திருந்த, உறவினரான கடலுார் வைரங்குப்பத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன், 72; என்பவர் மாடியில் அமர்ந்து மது அருந்தி உள்ளார். போதை அதிகமானதால், பக்கத்தில் உள்ள வீட்டின் மாடியின் அமர்ந்திருந்த ராஜலிங்கத்தை பார்த்து நீ யார், இங்கே உட்கார்ந்து இருக்கிறாய் என கேட்டுள்ளார்.

அதற்கு, ராஜலிங்கம், இது என் வீடு, நான் உட்கார்ந்து இருக்கேன், நீ யாருடா என்னை கேள்வி கேட்பது என்று கேட்டுள்ளார். இதில், ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன், ராஜலிங்கத்தை எட்டி உதைத்து, கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில், காயமடைந்த ராஜலிங்கத்தை, அவரது குடும்பத்தினர் மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us