/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக முதியவரிடம் ரூ.33.63 லட்சம் மோசடி
/
டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக முதியவரிடம் ரூ.33.63 லட்சம் மோசடி
டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக முதியவரிடம் ரூ.33.63 லட்சம் மோசடி
டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக முதியவரிடம் ரூ.33.63 லட்சம் மோசடி
ADDED : ஜன 17, 2025 05:50 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 7 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் 34 லட்சத்து 10 ஆயிரம் இழந்துள்ளனர்.
புதுச்சேரி, நெல்லித்தோப்பு எல்லைப்பிள்ளைசாவடி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் ஷா., 64. இவரை கடந்த 15 நாட்களுக்கு முன் தொடர்பு கொண்ட மர்ம நபர், டில்லியில் இருந்து சி.பி.ஐ., போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறினார்.
அவர், சதீஷ் ஷாவை சைபர் மோசடி செய்த குற்றத்திற்காக டிஜிட்டல் அரெஸ்ட் செய்து உள்ளதாக மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டுமென கூறினார்.
இதைநம்பிய சதீஷ் ஷா கடந்த 15 நாட்களில் பல்வேறு தவணைகளாக 33 லட்சத்து 63 ஆயிரத்து 160 மர்மநபர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு செலுத்தியுள்ளார். அதன்பிறகே, ஆன்லைன் மோசடி கும்பலிடம் ஏமாந்து பணத்தை இழந்தது அவருக்கு தெரியவந்தது.
இதேபோல், கோரிமேட்டை சேர்ந்த ரேணுகா 9 ஆயிரத்து 600 ரூபாய், நைனார்மண்டபம் ராணி 15 ஆயிரம், பூமியான்பேட் ஜவஹர் நகர் ஸ்வாதி 6 ஆயிரத்து 116 ரூபாய், லாஸ்பேட்டை, ஜீவானந்தபுரம், பாரதி வீதியை சேர்ந்த ஜோதி ஷர்மிளா ஆயிரத்து 200 ரூபாய், அரும்பார்த்தபுரம் ராகவேந்திர பிரசாத் 4 ஆயிரத்து 265, புதுச்சேரியை சேர்ந்த சுமதி 11 ஆயிரம் என மொத்தம் 7 பேர் 34 லட்சத்து 10 ஆயிரத்து 341 இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.