/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அதிகமாக மது குடித்த முதியவர் சாவு
/
அதிகமாக மது குடித்த முதியவர் சாவு
ADDED : ஜன 05, 2026 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: மடுகரையில் அதிகமாக மது குடித்த டீ மாஸ்டர் பரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம் மாவட்டம், பள்ளியந்துார் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன், 65; டீ மாஸ்டர். இவர் மூச்சு திணறல் நோய்க்கு சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் மடுகரை வந்த பச்சையப்பன் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு அப்பகுதியில் உள்ள வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகில் இறந்து கிடந்தார்.
தகவலறிந்த மடுகரை போலீசார் சடலத்தை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது மகன் அஜித் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

