ADDED : ஜன 09, 2025 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சேதராப்பட்டில் மயங்கி விழுந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.
காட்டேரிக்குப்பம், அம்பேத்கர் வீதியைச் சேர்ந்தவர் செல்வம், 61. இவர் நேற்று முன்தினம் இரவு 8:45 மணியளவில், சேதராப்பட்டு சந்திப்பில் மயங்கி கிடந்தார். அவரை, அவரது மகன் இளவரசன் மீட்டு வானுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர் பரிசோதித்து, செல்வம் இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.