ADDED : செப் 17, 2026 07:44 PM
புதுச்சேரி: புதுச்சேரிக்கு மகனை பார்க்க வந்த முதியவர் கடற்கரை சாலையில் மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேரந்தவர் பாலு, 63. இவர், புதுச்சேரியில் வசித்து வரும் தனது மகன் பாண்டியனை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு வந்தார். ஆனால், மகன் வீட்டிற்கு செல்லாமல் கடற்கரை சாலைக்கு சென்ற பாலு, கார்கில் போர் நினைவிடம் அருகே மதியம் 2:30 மணிக்கு திடீரென மயங்கி விழுந்தார்.
இதைகண்ட அங்கிருந்தவர்கள் மயங்கி விழுந்தவர் கையில் இருந்த மொபைலில் மூலம் அவரது மகன் பாண்டியனை தொடர்பு கொண்டு, தகவலை தெரிவித்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பாண்டியன், மயங்கி கிடந்த தந்தையின் சட்டை பையை சோதனை செய்தபோது, அதில், காலி மது பாட்டில், பூச்சி கொல்லி மருத்து பாட்டில் ஆகியன இருந்தது.
இதையடுத்து, பாலுவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதனை செய்து, அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து பாண்டியன் அளித்த புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
