UPDATED : நவ 19, 2026 05:10 PM
ADDED : நவ 19, 2026 05:10 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: காப்பகத்தில் தங்கியிருந்த முதியவர் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அம்பத்துாரை அடுத்த ஒரகடம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன், 72; இவர் லாஸ்பேட்டை பகுதியில் உள்ள முதியோர் காப்பகத்தில் தங்கியிருந்தார். கடந்த 15ம் தேதி காப்பகத்தில் இருந்த அவர் மாயமானார்.
காப்பக நிர்வாகத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, காப்பக உரிமையாளர் தமிழேந்தி கொடுத்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
