/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விபத்தில் காயமடைந்த முதியவர் சாவு
/
விபத்தில் காயமடைந்த முதியவர் சாவு
ADDED : ஜன 23, 2025 05:18 AM
புதுச்சேரி: விபத்தில் காயமடைந்த முதியவர் இறந்தார்.
புதுச்சேரி, அரும்பார்த்தபுரம், பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் புருேஷாத்தமன், 64. கடந்த 20ம் தேதி இரவு புருேஷாத்தமன் வில்லியனுார் மெயின்ரோடு வழியாக பைக்கில் சென்றபோது, சாலையின் நடுவே உள்ள தடுப்புகட்டையில் மோதி கீழே விழுந்து காயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் புருேஷாத்தமனை மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
தகவலறிந்து வீட்டிற்கு வந்த சோபன்பாபு, தந்தையை மருத்துவமனைக்கு அழைத்தபோது, மறுத்து விட்டார்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் (21ம் தேதி) அதிகாலை வீட்டில் புருேஷாத்தமன் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

