தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நனைந்தபடி நடைபாதையில் படுத்திருந்த முதியவர் மீட்பு

நனைந்தபடி நடைபாதையில் படுத்திருந்த முதியவர் மீட்பு

நனைந்தபடி நடைபாதையில் படுத்திருந்த முதியவர் மீட்பு


ADDED : அக் 16, 2024 07:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2024 07:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி கனமழையில் நனைந்தபடி நடைப்பாதையில் படுத்திருந்த முதியவரை சாரோன் சொசைட்டி நிர்வாகிகள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

புதுச்சேரியில் பெய்துவரும் கனமழையில் முதியவர் ஒருவர் ஆதரவற்ற நிலையில், சாலையோரம் நடைபாதையில் படுத்து அவதிப்பட்டு வருவதாக பெரியக்கடை போலீசாருக்கு தகவல் வந்தது.

போலீசார் அளித்த தகவ லின்பேரில், தொண்டு நிறுவனமான சாரோன் சொசைட்டி நிறுவனர் மோகன், ராஜகுமார் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் வேனுடன் அங்கு சென்று, முதியவரை போலீசார் உதவியுடன் மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

குணமடைந்த பின், அவரை குடும்பத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என சாரோன் சொசைட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us