/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஸ்கூட்டர் மீது பஸ் மோதல் முதியவர் உயிர் தப்பினார்
/
ஸ்கூட்டர் மீது பஸ் மோதல் முதியவர் உயிர் தப்பினார்
ADDED : செப் 16, 2025 07:18 AM
புதுச்சேரி : போக்குவரத்து மாற்றத்தினால் ஏற்பட்ட நெரிசல் காரணமாக, ஏற்பட்ட விபத்தில் முதியவர் அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்.
புதுச்சேரி- கடலுார் சாலை ஏ.எப்.டி., மில் அருகே ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அதனையொட்டி, இவ்வழியே செல்லும் வாகனங்கள், நேற்று முதல் இந்திரா சதுக்கம், நுாறடி சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இந்திரா சதுக்கம் - நுாறடி சாலை வளைவு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
இந்நிலையில் நைனார்மண்டத்தை சேர்ந்த முகமது யூசுப்,69; நேற்று காலை, நெல்லித்தோப்பில் இருந்து ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார்.
இந்திரா சதுக்கத்தில் இருந்து நுாறடி சாலைக்கு திரும்ப முயன்றபோது, பின்னால் வந்த தனியார் பஸ், ஸ்கூட்டர் மீது மோதியது. அதில் ஸ்கூட்டம் சேதமடைந்தது.
முகமது யூசப் அதிஷ்டவசமாக உயிர்தப்பினார். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். மேலும், விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.