/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிட்னி பாதிப்பு முதியவர் தற்கொலை
/
கிட்னி பாதிப்பு முதியவர் தற்கொலை
ADDED : ஜூன் 12, 2025 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் கிட்னி பாதிப்பால் அவதிப்பட்ட தொழிலாளி துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காரைக்கால் திருள்ளார் சுப்ராயபுரம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த நாகப்பன், 77 ; கூலி தொழிலாளி. இவர் கிட்னி பாதிப்பால் அவதிப்பட்டுவந்தார். தனியார் மருந்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் நாகப்பன் 100நாள் வேலைக்கு சென்றபோது உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டின் பின்பக்கம் உள்ள புளிய மரத்தில் துாக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். புகாரின் பேரில் திருநள்ளார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.