/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதியவரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது
/
முதியவரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது
ADDED : அக் 30, 2025 07:33 AM

புதுச்சேரி: வயது மூப்பு காரணமாக உயிரிழந்த முதியவரின் கண்களை, அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.
புதுச்சேரி மூலக்குளத்தை சேர்ந்தவர் பாலக்கிருஷ்ணன், 72; வயது மூப்பு காரணமாக நேற்று காலை உயிரிழந்தார். இவரது கண்களை தானம் செய்திட, அவரது மகன் லெனின் பாஸ்கர், மகள் சரேப்தால், மருமகன்கள் மனுவேல் பெனினால்,ஆனந்த சிவபாலன் மற்றும் குடும்பத்தினர் முன்வந்து, அது குறித்து இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை நிர்வாக குழு உறுப்பினர் அய்யனாரை தொடர்பு கொண்டனர்.
இதனையடுத்து, அய்யனார், அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், அங்கு வந்த மருத்துவ குழுவினர், பாலக்கிருஷ்ணனின் குடும்பத்தினரிடம் ஒப்புதல் பெற்று, அவரது கண்களை அறுவை சிகிச்சை செய்து கருவிழிகளை சேகரித்து, தானமாக பெற்றனர்.
வயது மூப்பு காரணமாக உயிரிழந்த முதியவரின் கண்களை, அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கிய சம்பவம், அப்பகுதி மக்களிடையே, கண் தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.

