தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மூதாட்டி தற்கொலை போலீசார் விசாரணை

மூதாட்டி தற்கொலை போலீசார் விசாரணை

மூதாட்டி தற்கொலை போலீசார் விசாரணை


ADDED : நவ 27, 2026 08:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2026 08:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: மூதாட்டி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருமாம்பாக்கம், பிள்ளையார்கோவில் வீதியை சேர்ந்தவர் பாலு, 48; தனியார் மருத்துவ கல்லுாரி ஊழியர். இவரது தந்தை சுப்ரமணி, 85; தாய் தனலட்சுமி 80. இருவரும், அதே பகுதியில் வசித்து வருகின்றனர். நேற்று (நவ.,26) மாலை, அதே பகுதியில் வசித்து வரும் பாலுவின் சகோதரி, திலகம் தனது தாய் தனலட்சுமிக்கு டீ கொடுப்பதற்காக சென்றார்.

அப்போது, தனலட்சுமி வீட்டின் கூரையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us