நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : நோய் குணமாகாத விரக்தியில் முதியவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரியாங்குப்பம் பி.சி.பி., நகரை சேர்ந்தவர் மனோகரன், 64. இவர் சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை வந்தார். நோய்கள் குணமாகாததால் கடந்த சில மாதங்களாக விரக்தியில் இருந்து வந்தார்.
அவர் நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

