தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாகனம் மோதி மூதாட்டி பலி

 வாகனம் மோதி மூதாட்டி பலி

 வாகனம் மோதி மூதாட்டி பலி


ADDED : ஜன 09, 2026 05:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2026 05:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம், ராமதாஸ் நகரை சேர்ந்தவர் லதா, 60; தவளக்குப்பம் மருத்துவமனை வீதியில் காய்கறி விற்பனை செய்து வந்தார்.

இவருக்கு உடல் நிலை சரியில்லாததால், நேற்று தவளக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார். சிகிச்சை பெற்று, மதியம் 1:00 மணியளவில், வீட்டிற்கு செல்வதற்காக, புதுச்சேரி - கடலுார் சாலை, பூரணாங்குப்பம் சாலை சந்திப்பு பகுதியில் சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது, கடலுாரில் இருந்து புதுச்சேரியில் உள்ள தனியார் வங்கிக்கு பணம் கொண்டு அவ்வழியாக சென்ற டெம்போ டிராவலர் வாகனம் லதாவின் மீது மோதியது.

படுகாயமடைந்த அவரை, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us