தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாடியில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி

 மாடியில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி

 மாடியில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி


ADDED : மார் 12, 2026 03:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 03:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து தலையில் காயமடைந்த மூதாட்டி இறந்தார்.

தருமாபுரி, புளிய மட்டம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிபால் மனைவி காசியம்மாள், 72. இவர் தனது மகள் பராமரிப்பில் இருந்து வருகிறார். நேற்று காலை வீட்டின் முதல் மாடியில் உள்ள கழிவறைக்கு சென்ற காசியம்மாள், கால் தவறி பால்கனியில் இருந்து கீழே விழுந்து தலையில் படுகாயமடைந்தார்.

இதையடுத்து, அவரை உறவினர்கள் மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து காசியம்மாள் இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us