தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மேல்தள சுவர் இடிந்து விழுந்து சாலையில் சென்ற மூதாட்டி பலி :காரைக்காலில் பரபரப்பு

 மேல்தள சுவர் இடிந்து விழுந்து சாலையில் சென்ற மூதாட்டி பலி :காரைக்காலில் பரபரப்பு

 மேல்தள சுவர் இடிந்து விழுந்து சாலையில் சென்ற மூதாட்டி பலி :காரைக்காலில் பரபரப்பு


ADDED : ஏப் 13, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 07:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் பழைய கட்டடத்தில் மேல்தளம் இடிந்து விழுந்து சாலையில் சென்ற மூதாட்டி இறந்தார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட பாரதியார் சாலையில் பழமையான கட்டடத்தில் மதுபானக்கடை இயங்கி வந்தது. கட்டடம் சிதிலமடைந்ததால் பாதுகாப்பு கருதி இதை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று காலை 11.40 மணிக்கு கட்டடத்தின் மேல்தளத்தை இடிக்க முயன்ற போது சாலையோரத்தில் இருந்த கட்டடத்தின் கான்கிரீட் மேல்தளம் இடிந்து விழுந்தது . இதில் அந்த வழியாக சென்ற முஸ்தபா கமல் வீதியை சேர்ந்த சுனோத்தாபேகம், 70; சிக்கி சம்பவ இடத்தில் இறந்தார்.

தகவல் அறிந்த நகர போலீசார் மற்றும் தீயணைப்புதுறை மீட்டு குழுவினர் பொக்லைன் இயந்திர மூலம் இடிபாடுகளில் சிக்கியிருந்த மூதாட்டின் உடலை மீட்டு அரசு மருந்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கட்டட இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என தீயணைப்பு ஊழியர்கள் ஜே.சி.பி.இயந்திரம் மூலம் தேடுபணியில் ஈடுப்பட்டனர்.

நகர போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை செய்துவருகின்றனர். கட்டட மேல் தளம் இடிந்து விழுந்து மூதாட்டி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவத்தால் பிரதான சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us