/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குளத்தில் மூழ்கிய மூதாட்டி சாவு
/
குளத்தில் மூழ்கிய மூதாட்டி சாவு
ADDED : நவ 30, 2024 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: பாகூரில் குளத்தில் மூழ்கிய அடையாளம் தெரியாத மூதாட்டி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாகூர் தீயணைப்பு நிலையம் எதிரே விநாயகர் கோவில் குளம் உள்ளது. இக்குளத்தில் கடந்த 25ம் தேதி மதியம் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிருக்கு போராடினார். அவரை பாகூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து, உயிரிழந்த மூதாட்டி யார் என, விசாரித்து வருகின்றனர்.