ADDED : டிச 20, 2025 06:25 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதி காங்., மகளிரணி சார்பில் தேர்தல் விழிப்புணர்வு கூட்டம் பெத்துசெட்டிப்பேட்டில் நடந்தது.
கமலா அறக்கட்டளை முதன்மை செயலர் ரமா வைத்தியநாதன் தலைமை தாங்கினார். வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பளராக புதுச்சேரி மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., கலந்து கொண்டு தேர்தல் விழிப்புணர்வு குறித்து பேசினாா். நிகழ்ச்சியில் திரளான காங்., மகளிர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.வார்டு செயலாளர் செல்வி நன்றி கூறினார்.
