தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சப் கலெக்டர் தலைமையில் தேர்தல் ஆலோசனை கூட்டம்

 சப் கலெக்டர் தலைமையில் தேர்தல் ஆலோசனை கூட்டம்

 சப் கலெக்டர் தலைமையில் தேர்தல் ஆலோசனை கூட்டம்


ADDED : பிப் 27, 2026 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 05:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்ர: வில்லியனுார் தெற்கு பகுதி சப்-கலெக்டர் குமரன் தலைமையில் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

வருவாய் அதிகாரி பிரத்திவி, தாசில்தார்கள் சேகர், விபிஷ், துணை தாசில்தார் தமிழரசன், வில்லியனுார் மற்றும் நெட்டப்பாக்கம் கொம்யூன் ஆணையர்கள் பிரபாகரன், ரமேஷ், கொம்யூன் பகுதியில் உள்ள பேனர் டிசைனர்கள், ஆப்செட் பிரிண்டிங் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் சப் கலெக்டர் குமரன் பேசுகையில், 'தேர்தல் நேரம் என்பதால் வேட்பாளர்கள் தங்களது வரவு செலவு கணக்கை கண்காணிக்க வேண்டும். பேனர் டிசைன் செய்பவர்கள், பிரிண்டிங் செய்பவர்கள், விளம்பர நோட்டீஸ்கள் அச்சிடுபவர்கள் வாடிக்கையாளர்களின் பெயர், மொபைல் போன் எண், நகல் எண்ணிக்கை அவசியம் இருக்கவேண்டும்.

வாடிக்கையாளர்களிடம் படிவம்-ஏ பூர்த்தி செய்து வாங்க வேண்டும். இந்த விதிமுறைகளை மீறி யாரேனும் நோட்டீஸ்கள் அடித்து கொடுத்தால் சம்மந்தப்பட்ட அச்சக உரிமையாளருக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம், ஆறு மாதம் சிறை தண்டனையும் கிடைக்கும்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us