தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காந்தி திடலில் தேர்தல் திருவிழா 

 காந்தி திடலில் தேர்தல் திருவிழா 

 காந்தி திடலில் தேர்தல் திருவிழா 


ADDED : ஏப் 07, 2026 05:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2026 05:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்காளர் பங்கேற்பை உறுதி செய்வதற்காக, வாக்காளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் சார்பில், தேர்தல் திருவிழா காந்தி திடலில் நடந்தது.

நிகழ்ச்சியை தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். துணை தலைமை தேர்தல் அதிகாரிகள் தில்லைவேல், கந்தசாமி முன்னிலை வகித்தனர். விழாவில், ஜனநாயக மண்டபம் எனும் தேர்தல் செயல்முறை மற்றும் ஓட்டு அளிப்பின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் மாதிரி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. நேர்மையான வாக்காளர் இயக்கத்தின் கீழ் கையொப்ப இயக்கம் நடத்தப்பட்டது.

விழாவையொட்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதல் முறை வாக்காளர்களுக்கான இறகுப்பந்து, ரங்கோலி, ரீல்ஸ் மற்றும் காகித கூழ் கலைப்போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us