/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேர்தல் சட்டங்கள் வினாடி வினா
/
தேர்தல் சட்டங்கள் வினாடி வினா
ADDED : ஏப் 07, 2026 05:34 PM

புதுச்சேரி: புதுச்சேரி லப்போர்த் வீதியில் உள்ள எக்கோல் ஆங்லேஸ் அரசு தொடக்கப் பள்ளியில், சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் விழிப்புணர்வு 'தேர்தல் சட்டங்கள் பற்றிய வினாடி வினா' போட்டி நடந்தது.
போட்டியினை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்ற நீதிபதி முத்துவேல் துவக்கி வைத்து, ஓட்டுரிமை என்பது அவரவருக்கு கொடுக்கப்பட்ட உரிமை, வாக்காளர்களாகிய நாம் அனைவரும் நுாறு சதவீதம் தவறாமல் ஓட்டு அளித்திட வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தார்.
இதில், முதுநிலை வழக்கறிஞர் மோகன்தாஸ் தலைமையில், சட்டக்கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் என இரு பிரிவுகளாக 75 பேர் பங்கேற்ற வினாடி- வினா போட்டிகள் நடந்தது.
இரு பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் வாக்காளர் விழிப்புணர்வு பிரிவு செய்திருந்தது.

