ADDED : பிப் 02, 2026 03:37 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதி வேட்பாளர் விக்னேஷ் கண்ணன் தேர்தல் அலுவலகம்திறப்பு விழா நடந்தது.
வரும் சட்டசபை தேர்தலில், புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் முன்னாள் எம்.பி., கண்ணன் மகன் விக்னேஷ் கண்ணன் போட்டியிட உள்ளார். இதற்காக புதுச்சேரி செட்டித்தெருவில் விக்னேஷ் கண்ணன் புதிய தேர்தல் அலுவலகம் அமைத்துள்ளார்.
தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் முன்னாள் எம்.பி., கண்ணன் மனைவி சாந்தி கண்ணன் தேர்தல் அலுவலகத்தைதிறந்து வைத்தார்.
தொடர்ந்து தேர்தல் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் தலைவரும், முன்னாள் எம்.பி., யுமான கண்ணன் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து குத்துவிளக்கேற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
விழாவில்,ராஜ் பவன் தொகுதியைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
