தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓட்டுப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை ;நுாறு சதவீதம் ஒட்டளிக்க தேர்தல் அதிகாரி வயுறுத்தல்

 ஓட்டுப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை ;நுாறு சதவீதம் ஒட்டளிக்க தேர்தல் அதிகாரி வயுறுத்தல்

 ஓட்டுப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை ;நுாறு சதவீதம் ஒட்டளிக்க தேர்தல் அதிகாரி வயுறுத்தல்


ADDED : ஏப் 06, 2026 09:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2026 09:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஓட்டுப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், அனைவரும் தங்களது ஓட்டினை பதிவு செய்திட வேண்டும் என புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; புதுச்சேரி சட்டசபை பொதுத் தேர்தல் 2026, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் கடந்த மாதம் 15ம் தேதி அறிவிக்கப்பட்டது. அட்டவணைப்படி, புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்தில் ஓட்டுப்பதிவு வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது. 1951ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 135 (பி)-ன் படி, எந்தவொரு தொழில், வாணிபம், தொழிற்சாலை, கடைகள் அல்லது பிற நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து நபர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்களாக இருப்பின், ஓட்டுப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

மேலும், அத்தகைய விடுமுறைக்காக ஊதியத்தில் எந்தவிதப் பிடித்தமும் செய்யப்படக்கூடாது. இது குறித்து புதுச்சேரி தொழிலாளர் துறை தேவையான அறிவிப்பு, சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளா, நாகாலாந்து, அசாம் மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளும் இதற்கு இணையான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

எனவே, இம்மாநிலங்களில் பணிபுரிந்து கொண்டிருக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளவர்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வரும் 9ம் தேதி அன்று தங்களது ஓட்டினை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us