தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

 புதுச்சேரியில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

 புதுச்சேரியில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு


ADDED : ஏப் 08, 2026 04:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2026 04:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பு துச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு பதிவு நாளை 9ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 30 தொகுதிகளில்மொத்தம் 1099 ஓட்டுச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டன.

34 தேசிய கட்சி வேட்பாளர்கள், 63 மாநில கட்சி வேட்பாளர்கள், 80 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத வேட்பாளர்கள், 117 சுயேச்சை வேட்பாளர்கள் என, மொத்தம் 294 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தினை பொருத்தவரை 30 சட்டசபை தொகுதிகளில் 1099 மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள், 1099 கட்டுப்பாட்டு கருவி, 1099 வி.வி.,பாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

புதுச்சேரி பிராந்திய ஓட்டு பதிவு இயந்திரங்கள் தாகூர் கலை கல்லுாரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக், மகளிர் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் உள்ள மூன்று ஓட்டு எண்ணிக்கை மையத்தின் ஸ்ட்ராங் ரூம்களில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இன்று 8ம் தேதி மதியம் 12 மணி முதல் இந்த ஓட்டு பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக ஓட்டுச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிரித்து அனுப்பப்பட உள்ளன. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் அனைத்து வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்., வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.வேட்பாளர்கள் அல்லது வேட்பாளரின் முதன்மை முகவர்கள் முன்னிலையில் சீல் திறக்கப்பட்டு ஓட்டு பதிவு இயந்திரங்கள் கட்டுப்பாட்டு கருவிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

புதுச்சேரி மாவட்டத்தினை பொருத்தவரை 918 மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள், 918 கட்டுப்பாட்டு கருவிகள், 918 வி.வி.,பாட் பயன்படுத்தப்படுகிறது. இதுமட்டுமின்றி அவசர சூழ்நிலையை சமாளிக்க 364 மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள், 364 கட்டுப்பாட்டு கருவி, 459 வி.வி., பாட் இருப்புவைக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தினை பொருத்தவரை தலா 181 மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, வி.வி., பாட் பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us