/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்
/
வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்
வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்
வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்
ADDED : நவ 14, 2024 07:30 AM
புதுச்சேரி; புதுச்சேரியில் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மாதவராவ் ஆஷிஷ் மோரே கலந்துரையாடினார்.
புதுச்சேரி மாநிலம் முழுதும் சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி, கடந்த அக்., 29ம் தேதி துவங்கியது. இப்பணி வரும் 28ம் தேதி வரை நடக்கிறது. வாக்காளர் பட்டியலை தயார் செய்ய இந்திய தேர்தல் ஆணையம், பார்வையாளராக அரசு செயலர் மாதவராவ் ஆஷிஷ் மோரேவை நியமித்துள்ளது. இந்நிலையில் அவர் கடந்த வாரம் நடந்த சிறப்பு முகாமில் புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுச்சாவடிகளை பார்வையிட்டார்.
இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கலெக்டர் குலோத்துங்கன் முன்னிலை வகித்த இக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மாதவராவ் ஆஷிஷ் மோரே பங்கேற்றார்.
அவர், இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள், நிலுவையில் உள்ளதற்கான காரணங்களை வாக்காளர் பதிவு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
அரசியல் கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்து உடனடியாக வாக்காளர் பதிவு அதிகாரிகளை நிவர்த்தி செய்யவும், நீக்கல் சம்மந்தமான விண்ணப்பங்களை நன்கு கள ஆய்வுக்கு பின் முடிவெடுக்கும் படியும் அறிவுறுத்தினார்.
இதில் அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள், புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள வாக்காளர் பதிவு அதிகாரிகள், கலெக்டர் அலுவலக அதிகாரிகள் பங்கேற்றனர்.

