/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அறுந்து விழுந்த மின்கம்பிகள் மின் ஊழியர்கள் சீரமைப்பு
/
அறுந்து விழுந்த மின்கம்பிகள் மின் ஊழியர்கள் சீரமைப்பு
அறுந்து விழுந்த மின்கம்பிகள் மின் ஊழியர்கள் சீரமைப்பு
அறுந்து விழுந்த மின்கம்பிகள் மின் ஊழியர்கள் சீரமைப்பு
ADDED : நவ 29, 2024 04:20 AM

திருபுவனை: திருபுவனை அடுத்த சன்னியாசிக்குப்பத்தில் சாலையில் அறுந்து விழுந்த மின் கம்பிகளை கொட்டும் மழையில் மின்துறை ஊழியர்கள் சீரமைத்தனர்.
புதுச்சேரியில் பெய்து வரும் கனமயைால் திருபுவனை அடுத்த சன்னியாசிக்குப்பம் கிராம சாலையில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தது. சாலையோரங்களிலும், வயல்வெளி பகுதியிலும் மின்கம்பிகள் ஆங்காங்கே தொங்கிக்கொண்டிருந்தது.
தகவலறிந்த திருபுவனை துணை மின்நிலைய உதவிப்பொறியாளர் பன்னீர்செல்வம் இளநிலைப் பொறியாளர் பழனிவேல் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மின் வினியோகத்தை துண்டித்து, கொட்டும் மழையிலும் அறுந்து விழுந்த மின்கம்பிகளை சீரமைத்து, மீண்டும் மின் சப்ளை வழங்கினர்.