ADDED : டிச 07, 2024 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்றதால், எலக்ட்ரீஷியன் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி, வினோபா நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 38; எலக்ட்ரீஷியன். குடிப்பழக்கம் உடைய இவர் நேற்று முன்தினம் அதிக போதையில் வீட்டிற்கு வந்ததால், மனைவி ஆரோக்கியமேரி கண்டித்தார்.
இதனால் இருவரிடையே தகராறு ஏற்பட்டு, ஆரோக்கியமேரி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால், மனமுடைந்த சதீஷ்குமார் வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆரோக்கியமேரி அளித்த புகாரின் பேரில், கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.