நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : காட்டேரிக்குப்பம், அன்னைராணி கான்வென்ட் வீதியை சேர்ந்தவர் ராஜன், 42; எலக்ட்ரீஷியன். இவரது மனைவி சுமித்ரா. 2 மகள்கள் உள்ளனர்.
குடிப்பழக்கம் உடைந்த ராஜன் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். தனது வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து முதுகு எலும்பு, இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 3ம் தேதி குடிபோதையில் வீட்டிற்கு வந்த ராஜன் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு, மயங்கி விழுந்தார். அவரை மீட்டு, காட்டேரிக்குப்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, டாக்டர் பரிசோதித்து ராஜன் இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.