நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: நுகர்வோர்கள் நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை செலுத்தி, மின் துண்டிப்பை தவிர்க்க வேண்டும் என மின்துறை அறிவுறுத்தியுள்ளது.
மின்துறையில், தீவிர மின் துண்டிப்பு மேற் கொள்ள உள்ளது. அதனால், கிராமம் தெற்கு கோட்டம், அலுவலகத்திற்குட்பட்ட, அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர், கரிக்கலாம்பாக்கம், வடமங்கலம், திருவண்டார்கோவில், வாதானுார், கரியமாணிக்கம், கரையாம்புத்துார் ஆகிய பகுதிகளுக்குட்பட்ட நுகர்வோர்கள் தங்களுடைய நிலுவை தொகை, மற்றும் மின் கட்டணத்தை உரிய நேரத்தில், செலுத்தி, மின் துண்டிப்பை தவிர்க்க வேண்டும் என தெற்கு கோட்டம் - கிராமம், செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

