/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நிலுவை தொகை செலுத்த மின்துறை அறிவுறுத்தல்
/
நிலுவை தொகை செலுத்த மின்துறை அறிவுறுத்தல்
ADDED : ஆக 21, 2025 11:40 PM
புதுச்சேரி: மின்துறை தெற்கு கோட்டம் அலுவலகத்திற்கு உட்பட மின் நுகர்வோர்கள் நிலுவைத் தொகையை செலுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செயற்பொறியாளர் கிருஷ்ணசாமி செய்திக்குறிப்பு:
மின்துறை தீவிர மின் இணைப்பு துண்டிப்பு மேற்கொள்ள இருப்பதால், கிராமம் (தெற்கு) கோட்டம் அலுவலகத்திற்கு உட்பட்ட அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர், கரிக்கலாம்பாக்கம், வடமங்கலம், திருவண்டார்கோவில், வாதானுார், கரியமாணிக்கம், கரையாம்புத்துார் பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள், தங்களுடைய நிலுவைத்தொகை மற்றும் மின் கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்தி மின் இணைப்பு துண்டிப்பை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

