/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்துறை ஊழியர் ஸ்கூட்டி திருட்டு
/
மின்துறை ஊழியர் ஸ்கூட்டி திருட்டு
ADDED : செப் 23, 2024 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : மின்துறை ஊழியர் ஸ்கூட்டியை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, மூலக்குளம் மோதிலால் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ், 44; மின்துறை ஊழியர். இவர் நேற்று முன்தினம் கோவிந்தன்பேட் பகுதியில் புதிதாக கட்டி வரும் வீட்டை பார்க்க தனது ஸ்கூட்டியில் சென்றார். ஸ்கூட்டியை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு வீட்டு உள்ளே சென்றார். மீண்டும் வெளியே வந்த பார்த்தபோது ஸ்கூட்டியை காணவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.