/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
19 அரசு துறைகளில் ஊதிய முரண்பாடுகளை... களையுங்கள்; மத்திய உள்துறை அமைச்சகத்திடம் முறையீடு
/
19 அரசு துறைகளில் ஊதிய முரண்பாடுகளை... களையுங்கள்; மத்திய உள்துறை அமைச்சகத்திடம் முறையீடு
19 அரசு துறைகளில் ஊதிய முரண்பாடுகளை... களையுங்கள்; மத்திய உள்துறை அமைச்சகத்திடம் முறையீடு
19 அரசு துறைகளில் ஊதிய முரண்பாடுகளை... களையுங்கள்; மத்திய உள்துறை அமைச்சகத்திடம் முறையீடு
ADDED : நவ 24, 2025 07:55 AM

புதுச்சேரி: அரசின் 19 துறைகளின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என, மத்திய அரசின் கதவை புதுச்சேரி அரசு தட்டியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம், படிகள் மற்றும் ஓய்வூதியங்கள் ஆகியவற்றை மறு ஆய்வு செய்து, திருத்தியமைக்கப்பட்ட ஊதிய விகிதங்களை அரசு ஊழியர் ஊதிய குழு பரிந்துரைக்கிறது. ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த குழு அமைக்கப்படுகிறது.
இந்த ஊதிய குழுவின் பரிந்துரைகள் மாநில அரசு ஊழியர்களுக்கும் அமல்படுத்தப்படுகிறது. புதுச்சேரி அரசும் அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தி வருகிறது.
அரசு ஊழியர்கள் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ள புதுச்சேரி அரசு, தற்போது, 19 அரசு துறைகளை சேர்ந்த 54 அரசு பணியிடங்களின் ஊதிய முரண்பாடுகளை ஒரு முறை தளர்வு அளித்து களைய வேண்டும் என்ற கோரிக்கையுடன், மத்திய அரசின் கதவை தட்டியுள்ளது.
இது தொடர்பான தகவல்களை திரட்டுவதற்காக அனைத்து அரசு துறைகளுக்கும் அவசர சுற்றிக்கை அனுப்பியுள்ளது. வரும் 30ம் தேதிக்குள் அனைத்து துறைகளும் தகவல் அனுப்ப வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து அரசு துறைகளும் ஊதிய முரண்பாடுகளை திரட்டி தொகுக்கும் பணியில் இறங்கியுள்ளன.
என்ன காரணம் நான்காவது ஊதியக்குழு 1986ம் ஆண்டு முதல் 1995ம் ஆண்டு வரை அமல்படுத்தப்பட்டது. அடுத்து 1996ம் ஆண்டு ஐந்தாவது ஊதிய குழு பரிந்துரை அமலில் வந்தது. அப்போது ஊதிய முரண்பாடுகளை, சுட்டிக்காட்டிய புதுச்சேரி அரசு ஊழியர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
அதையடுத்து புதுச்சேரி அரசு ஒரு நபர் கமிட்டி அமைத்து ஊதியக்குழு முரண்பாடுகள் களைய செய்தது. புதிய ஊதியங்களும் அமல் செய்யப்பட்டன. இங்கு தான் சிக்கல் எழுந்தது. ஒரு நபர் கமிட்டி பரிந்துரை ஒரு பக்கம் இருந்தாலும் மத்திய அரசின் அனுமதி பெறவில்லை.
சில அரசு பணியிடங்களுக்கு ஐந்தாவது ஊதிய குழு பரிந்துரைத்த சம்பளம் அதிகமாக இருந்தது.
ஐந்தாவது ஊதிய குழுவின் பரிந்துரைகள் ஜனாதிபதி வரை சென்று கையெழுத்தாகி வருகிறது. அதனை அமல்படுத்தாமல், தன்னிச்சையாக புதிய ஊதிய விகிதத்தை ஏன் அமல்படுத்தப்பட்டது என, மத்திய உள்துறை ஏற்றுக்கொள்ளாமல் புதுச்சேரி அரசிடம் கேள்வி எழுப்பியது.
இப்போது எட்டாவது ஊதிய குழு பரிந்துரை அமல்படுத்தப்பட உள்ள சூழ்நிலையில், ஐந்தாவது ஊதியக்குழு முரண்பாடு குழப்பம் இதுவரை தீராதது புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த 19 துறைகளில் புதிய பணியிடங்களையும் நிரப்ப முடியவில்லை. மத்திய அரசின் ஊதிய குழு பரிந்துரை அடிப்படையில் நிரப்புவதா அல்லது மாநில அரசின் ஒரு நபர் கமிட்டி ஊதியக்குழு பரிந்துரையை செயல்படுத்தப்படுவதா என்பதில் தொடர் குழப்பம் ஏற்பட்டு கிடப்பில் போடப்பட்டது.
எனவே, புதுச்சேரி அரசின் 19 அரசு துறைகளில் உள்ள அனைத்து ஊதிய குழப்பங்களையும் ஒரே ஒரு முறை தளர்வு அளித்து தீர்க்க வேண்டும் என, புதுச்சேரி அரசு, மத்திய அரசிடம் முறையிட்டுள்ளது. மத்திய அரசும், புதுச்சேரி அரசின் கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ளதால், இப்போது தகவல்கள் வேகமாக திரட்டப்பட்டு வருகின்றன.

