தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஏம்பலம் பாலாஜி பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை

ஏம்பலம் பாலாஜி பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை

ஏம்பலம் பாலாஜி பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை


ADDED : மே 11, 2025 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2025 01:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஏம்பலம் பாலாஜி மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

பள்ளி அளவில் மாணவி ஹேமலட்சுமி 593 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், மாணவி நித்யாஸ்ரீ 577 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவி கார்த்திகா 576 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித் தனர். தேர்வு எழுதிய 164 மாணவர்களும் தேர்ச்சி பெற்று நுாறு சதவீத தேர்ச்சியை பதிவு செய்தனர். 550 மதிப்பெண்களுக்கு மேல் 16 பேரும், 500க்கு மேல் 47 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 90 பேர் எடுத்துள்ளனர்.

கணிதம், இயற்பியல், வேதியியல் பாடத்தில் ஒரு மாணவரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 8 பேரும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் 6 பேரும் சென்டம் எடுத்துள்ளனர்.

பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகி அழகப்பன், ஒருங்கிணைப்பாளர் பாலாஜி ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பள்ளி நிர்வாகி கூறுகையில், 'இந்த வெற்றிக்கு ஒத்துழைத்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us