தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கம்பளிக்காரன்குப்பத்திற்கு பஸ் வசதி ஏம்பலம் காங்., வேட்பாளர் வாக்குறுதி

 கம்பளிக்காரன்குப்பத்திற்கு பஸ் வசதி ஏம்பலம் காங்., வேட்பாளர் வாக்குறுதி

 கம்பளிக்காரன்குப்பத்திற்கு பஸ் வசதி ஏம்பலம் காங்., வேட்பாளர் வாக்குறுதி


ADDED : ஏப் 03, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 05:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: ஏம்பலம் தொகுதி காங்., வேட்பாளர் கந்தசாமி நேற்று, கம்பளிகாரன்குப்பம், நத்தமேடு, ஒத்தவாடி கிராமங்களில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், 'கம்பளிகாரன்குப்பம், நத்தமேடு பகுதிகளுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தருவதே எனது முதல் பணியாக இருக்கும். இப்பகுதி மக்களுக்கு இடத்தை கையகப்படுத்தி இலவச மனைப்பட்டா வழங்கப்படும். கல்வியில் இடைநிற்றல் உடைய இளையோர்களுக்கு தொழில் தொடங்க நடவடிக்கை எடுப்பேன்.

அரசு வேலை செய்வோர் குறைவாக உள்ள கிராமங்களை அடையாளப்படுத்தி அங்குள்ள இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அரசு வேலை கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என, வாக்குறுதி அளித்து 'கை' சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.

அப்போது, கம்பளிகாரன்குப்பம் சிவமணி, வேல்முருகன், சுந்தர்ராஜ், சத்யா, கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us