/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோ-கோ போட்டியில் ஏம்பலம் அரசு பள்ளி முதலிடம்
/
கோ-கோ போட்டியில் ஏம்பலம் அரசு பள்ளி முதலிடம்
ADDED : ஆக 14, 2025 01:12 AM

புதுச்சேரி : மூன்றாம் வட்ட பள்ளிகளுக்கு இடையிலான, கோ-கோ சாம்பியன்ஷிப் போட்டியில், ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறை மூன்றாம் வட்டம் சார்பாக, பள்ளிகளுக்கு இடையிலான 14 வயதி ற்குட்பட்ட மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான கோ - கோ சாம்பியன்ஷிப் போட்டி, அபிஷேகப்பாக்கம், சேத்திலால் அரசு உயர் நிலைப் பள்ளியில் கடந்த வாரம் நடந்தது.
போட்டி துவக்க விழாவிற்கு தலைமை ஆசிரியர் டார்லிங் வின்சி இந்திரா தலைமை தாங்கினார். ஆசிரியர் அருளரசன் வரவேற்றார். ஆசிரியர் கலைவாணி முன்னிலை வகித்தார்.
சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி போட்டியைத் துவக்கி வைத்தார். விளையாட்டுப் போட்டிகளின் செயலாளர் தணிகைக்குமரன், கோ-கோ போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் கமலக்கண்ணன் வாழ்த்தி பேசினர்.
இப்போட்டிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 480 மாணவிகள், 40 அணிகளாக பங்கேற்றனர். இதில், 14 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், அபிஷேகப்பாக்கம், சேத்திலால் அரசு உயர் நிலைப்பள்ளி இரண்டாம் இடமும், மடுகரை, வெங்கடசுப்ப ரெட்டியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மூன்றாம் இடமும் பெற்றுள்ளது.
17 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் ஏம்பலம், மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடமும், அபிஷேகப்பாக்கம் சேத்திலால் அரசு உயர் நிலைப் பள்ளி இரண்டாம் இடமும், சேலியமேடு, கவிஞரேறு வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளி ௩ம் இடம் பெற்றுள்ளது.
ஏற்பாடுகளை, உடற்கல்வி ஆசிரியர் இளவரசன், ஆசிரியர் கண்ணப்பன் பிகோத், கணினி பயிற்றுனர் யுவராஜ், பள்ளி ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

