/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பணி நீக்க ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
/
பணி நீக்க ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
ADDED : பிப் 13, 2026 05:59 AM

புதுச்சேரி: பணி நீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள், மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி, பொதுப்பணித்துறையில் 2016ம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வவுச்சர் ஊழியர்கள், தேர்தல்துறை மூலம் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், அரசு உடனடியாக மீண்டும் வேலை வழங்க வேண்டும் என, வலியுறுத்தி நேற்று சுதேசி மில் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் தெய்வீகன், வினோத், குமரகுரு, சத்யாவதி, மணிவண்ணன், கலியமூர்த்தி, சக்திவேல் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

