பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்
பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்
ADDED : நவ 24, 2024 04:28 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி, : புதுச்சேரி தொழிலாளர் துறை வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில், தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்பு முகாம், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் நடந்தது.
முகாமை தொழிலாளர் துறை துணை ஆணையர் சந்திரகுமரன் துவக்கி வைத்தார். புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள எம்.ஆர்.எப்., இன்டெக்ரா,டி.வி.எஸ்., லுாகாஸ், மானடெக், டேட்டாமேடிக்ஸ் உள்ளிட்டபல்வேறு தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பநேர்காணல் நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்தனர்.இதில், 10ம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ, ஐ.டி.ஐ., இளநிலை பொறியியல், கலை அறிவியல், மருந்தியல், செவிலியர், கணக்கியல், கல்வியியல் மற்றும் எம்.பி.ஏ., உள்ளிட்ட படிப்புகளை படித்த,ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள்கலந்து கொண்டனர்.
