/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணக்குள விநாயகர் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்
/
மணக்குள விநாயகர் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்
மணக்குள விநாயகர் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்
மணக்குள விநாயகர் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்
ADDED : பிப் 10, 2025 06:14 AM

புதுச்சேரி,: மணக்குளவிநாயகர்இன்ஸ்ட்டியூட்ஆப்டெக்னாலஜியில், சேலம் வி ஹெல்த்டெக் நிறுவனத்தின் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
கலிதீர்தாள்குப்பம் மணக்குளவிநாயகர்இன்ஸ்ட்டியூட்ஆப் டெக்னாலஜி கல்லுாரி, இந்த கல்வியாண்டில் டி.சி.எஸ்., காக்னிசண்ட், ஸோஹோ, கார் டெக்னாலஜிஸ், ரெனால்ட் போன்ற 52 பன்னாட்டு மற்றும் புகழ் பெற்ற நிறுவனங்களில் 85 சதவீத வேலை வாய்ப்புகளை உருவாக்கி, மொத்தம் 578 பணி நியமன ஆணைகளை பெற்று தந்துள்ளது.
அதன்படி, கல்லுாரியில் சேலம், வி ஹெல்த்டெக்நிறுவனம் சார்பில் நடந்த பொது வளாக வேலை வாய்ப்பு முகாமில், நிறுவனமனித வளத்துறைமேலாளர்கள் சரவணன், கேசவன்,சக்திவேல் மற்றும் குழுவினர், நிறுவனத்தின் விவரங்கள் குறித்து விளக்கினர். தொடர்ந்து நேர்முக தேர்வு நடந்தது.
நிகழ்ச்சிக்குமணக்குள விநாயகர்கல்விகுழும தலைவர் மற்றும்நிர்வாகஇயக்குனர் தனசேகரன், செயலாளர்டாக்டர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன் தலைமை தாங்கினர். கல்லுாரி முதல்வர் மலர்க்கண் முகாமை துவக்கி வைத்தார்.வேலைவாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார்,அனைத்து துறை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கல்லுாரி இறுதி ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, 50க்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்புகளை பெற்றனர்.