தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரியூர் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது

 அரியூர் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது

 அரியூர் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது


ADDED : ஏப் 13, 2026 11:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 11:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாமில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கி பாராட்டினர்.

அரியூர் வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. பல்வேறு முன்னனி நிறுவனங்கள் சார்பில் நடந்த இந்த முகாமிற்கு வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் செயல் இயக்க அதிகாரி டாக்டர் வித்யா தலைமை தாங்கினார். பொதுமேலாளர் சவுந்தரராஜன் முன்னிலை வகித்தார். பொறியியல் கல்லுாரி முதல்வர் டாக்டர் பிரதீப் தேவநேயன் வரவேற்றார். கல்லுாரி வேலைவாய்ப்பு அதிகாரி ஆனந்தராஜ், மாணவர்களின் சாதனைகள் மற்றும் நடப்பு ஆண்டின் வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்கள் அடங்கிய அறிக்கை வாசித்தார்.

முகாமில் மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் குளோபல் டேலன்ட் நிறுவனம்-ராமச்சந்திரன், விர்ட்டுஷா அசோசியேட் இயக்குனர் பரத்மோகன் மற்றும் பின்ஷிலி நிறுவன எச்.ஆர் பரத்குமார், மாயகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்குத் ஆலோசனைகளை வழங்கினர்.

வேலைவாய்ப்பு முகாமில் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் 209 பேர் கலந்துகொண்டனர். அதில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பாராட்டினர். கல்லுாரி துணை முதல்வர் ஜெயராமன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us